Thursday, September 20, 2018

இணையத்தில் பதிவிடும் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளார்கள்

அல் கப்ஜி இஸ்லாமிய நிலையத்தில் வாராந்தம் இடம் பெரும் பாடத்திட்டம் தொடர் வகுப்புக்களை சர்வதேச தமிழ் சமூகம் பார்த்து பிரயோசனம் அடையும் முகமாக இணையத்தில் பதிவிடும் நடவடிக்கைகளை மீண்டும் சுவனத் தென்றல் தளத்தின் நிர்வாகி ஆரம்பித்துள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
எல்லாம் வல்ல அல்லாஹ் எமது இந்த முயற்சிகளை அங்கீகரித்து முழுமயான கூலியை தரவேண்டும்.
றிஸ்கான் முஸ்தீன்

https://www.youtube.com/watch?v=ComJ-aaE0kQ&feature=share

Thursday, May 2, 2013

பெண்களுக்கான விஷேட பயான் நிகழ்ச்சி

பறகஹதெனிய, பண்டாரகல பிரதேசத்தை மையப்படுத்திய விஷேட பயான் நிகழ்ச்சி ஒன்றை பிரதி மாதம் தோரும் கடைசி சனிக்கிழமை அஸர்த் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.
மார்க்க விடயங்களில் பின்தங்கிய பகுதிகளை முதன்மைப்படுத்தி பறகஹதெனிய தஃவா அமைப்பு (PDS) செய்து வரும் தஃவா நிகழ்வுகளில் ஒன்றாக இவ்விஷேட பயான் நிகழ்ச்சி குடும்பத் தலைவிகளிடமும், இளம் பெண்களிடமும் சன்மார்க்க அறிவு மேலிட வேண்டும் என்ற நன்நோக்கத்தோடு சகோதரர். இக்பால் அவர்கள் இல்லத்தில் நடைபெறுகின்றது.
எழுச்சி மிக்க சமூக மாற்றத்தை கருத்தில் கொண்டு எமது இந்நிகழ்ச்சியில் கலந்து பயன் பெறுமாரு அன்புடன் அழைக்கின்றோம்.

ஏற்பாடு
பறகஹதெனிய தஃவா அமைப்பு (PDS)

Tuesday, March 5, 2013

இவரைப் போன்ற நல்ல மக்களும் இருக்கின்றார்கள்

(சிங்களத்திலிருந்து தமிழுக்கு)

ஹெல உருமய உட்பட பலர் இனவாதத்தை, மதவாதத்தை முன்னிலைப்படுத்தி பொது பல சேனா போன்ற இயக்கங்களின் ஊடாக மீண்டும் இந்த நாட்டை நாசமக்குவதற்கு செயல்படுகின்றன என்று தென் மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித தேரர் (ஐ.தே.சு.மு.) தெரிவித்தார்.

தென் மாகாண சபை கூட்டம் தலைவர் கே.ஏ. சோமவங்சவின் தலைமையில் கூட்டப்பட்ட பொழுது சமித தேரர் இதனைக் கூறினார். அவர் மேலும் பேசும் போது:

‘நாம் அனைத்து சமயங்களையும் மரியாதை செய்ய வேண்டும். நான் பௌத்த சமயத்தை மதிக்கின்றேன். அதே நேரம் ஏனைய சமயங்களுக்காகவும் முன்வருகின்றேன். முஸ்லிம்களுக்கு எதிராக குழுக்களை இயக்கிக்கொண்டு ஹெல உருமய நாட்டை நாசமாக்க முயற்சிக்கின்றார்கள்.

30 வருட காலமாக கொன்று அழிந்த யுத்தத்தில் ஈடுபட்டோம். தற்போது போர் நிறுத்தப்பட்டாலும் யுத்தம் முடிவடையவில்லை. வடக்கின் வாலிபர்கள் முகாம்களின் சுவர்களில் எழுதிவைத்துள்ளார்கள் இந்த சீமெந்தை சிங்களவரின் இரத்தினால் பிசைந்து பிரபாகரனின் சிலையை வடிக்கவேண்டும் என்று. இன்றும் எமது நாட்டில் மலைநாட்டான், கீழ்நாட்டான் என்ற பேதம்இருக்கின்றது. தலதா பெரகராவில் இன்று வரையிலும் கீழ்நாட்டு மேளத்தையும் யக் பெரயவையும் (ஒரு வகை மேளம்) இசைக்க அனுமதிக்க மாட்டார்கள். ஆகவே சிங்களவர், தமிழர், முஸ்லிம் அனைவருக்கும் அமைதியாக வாழக்கூடிய முறைமையொன்றை உருவாக்க வேண்டும்.

தமிழர்கள் சூரியனையும் சந்திரனையும் கேட்கவில்லை. அதிகாரத்தை பகிரக் கோரினார்கள். தெற்கில் எமக்கு தீர்மானங்களையும் முடிவுகளையும் மேற்கொள்வதற்கு இருக்கின்ற உரிமை தமிழ் மக்களுக்கும் இருக்க வேண்டும். பேரினத்தின் கருத்தை ஏற்கொள்டா என்ற ஹெல உருமயவின் கருத்து பிழையானது.

சோம தேரர் காலமானது சர்வதேச சதியென்று கூறினாலும், சோம தேரருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க ஹெல உருமயவின் அமைச்சர்கள், உறுப்பினர்கள் ஒரேயொரு விவாதத்தையேனும் கோரவில்லை. இனம், மனத், குலம் எனப் பிரிந்து நிற்காமல் சட்டத்தின் ஆட்சியை உருவாக்க வேண்டும். எல்லா மக்களுக்கும் சமத்துவம், நியாயம் கிடைக்க வேண்டும்.

~~ இவரைப் போன்ற நல் மக்களும் இருக்கின்றார்கள் ~~

Hisham Hussain
on February 18, 2013 
@ 17:04 
By Hisham Hussain (facebook)
on February 18, 2013
@ 17:04

Thursday, January 3, 2013

My Son Darwesh Mohammed Riskhan

20121222_131823.jpg
20121130_090027.jpg
https://mail-attachment.googleusercontent.com/attachment/u/0/?ui=2&ik=f463544ef0&view=att&th=13bcb42dcdfd7d1a&attid=0.5&disp=inline&safe=1&zw&saduie=AG9B_P9wpWCU2QQTGnWYL6b0o4Hc&sadet=1357191935326&sads=FTiCOsTuEBQujgyQPoUt97WgtD0

ஓடிப்போதல்! என்னதான் தீர்வு?

-- செல் பேசி , இணைய தளம் மூலம் முறையற்ற தொடர்புகள் 
-- பள்ளிகூடத்திற்கும் கல்லூரிக்கும் சென்ற வயதிற்கு வந்த பெண் பிள்ளையை காணோம்.
-- வீட்டில் இருந்த குமரிப்பெண்கள் மாயம்
-- கடற்கரையில் கள்ள உறவு ஜோடிகள்

என்ற செய்திகள் நம் செவிகளையும் இதயங்களையும் தாக்கிக்கொண்டே இருக்கின்றது.

முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தவைகள் இன்று தினம் தினம் பெருகிக்கொண்டே வருகின்றது. கால் நடைகள் காணாமல் போனால் நமக்கு ஏற்படும் சலனம் கூட ஊரில் பிறர் வீட்டைச்சார்ந்த வயதிற்கு வந்த பிள்ளைகள் ஓடிப்போகும்போது ஏற்படுவதில்லை. அப்படியே ஏற்பட்டாலும் கூட அந்த உணர்வானது தற்காலிகமானதாக மட்டுமே இருக்கின்றது. இதில் குற்றவாளிகள் யார் ?

பழியை பிறர் மீது சுமத்தி எளிதாக தமது கடமையிலிருந்து தப்ப முயற்சிப்பதும் ஒரு வகையான குற்றம்தான். இந்த ஒழுக்க சீர்கேட்டிற்கு சம்பந்தபட்ட பிள்ளைகளை மட்டும் பழி சுமத்துவது பிரச்சினையை தீர்க்க உதவாது. குழந்தைகளின் முதல் உலகமாக ஆசானாக கல்விக்கூடமாக திகழ்வது அதன் பெற்றோர்கள்தான். அவர்களின் இரண்டாம் பெற்றோர் பள்ளிக்கூடத்து நிர்வாகிகளும் , ஆசிரியர்களும் ஆவார்கள்.
இவர்கள் இருவரிடத்தில்தான் குழந்தைகள் நல்ல ஒழுக்கத்தையும் , அறிவையும் உலகத்தையும் சுருக்கமாக சொல்வதானால் மொத்த வாழ்வைப்பற்றிய அறிமுகத்தையும் பெறுகின்றனர்.

நமதூரைப்பொறுத்த வரை பெற்றோர்களும் ஆசிரியர்களும் கல்விக்கூட நிர்வாகிகளும் கடமையிலும் கண்காணிப்பிலும் தவறும்போதுதான் குழந்தைகளிடம் ஒழுக்க சீர் கேடு துளிர் விடத்தொடங்குகின்றது. இதற்கு அண்மையில் நடந்த இணைய தளம் மற்றும் பள்ளி மாணவி + ஆசிரியை நிகழ்வுகளும் சாட்சி.

முதன்மை பொறுப்பில் இருக்கக்கூடிய பெற்றோரும் ஆசிரியரும் பள்ளி நிர்வாகிகளும் கடமை தவறும்போது உறவினர்கள் மீது அந்த பொறுப்பு சாரும். அவர்களும் தங்கள் கடமையை மறக்கும்போது இந்த நெறிப்படுத்தும் பொறுப்பு ஜமா அத்தையும் , ஆலிம்களையும் சாரும். இவர்கள் எல்லாரும் தங்கள் கடமையிலிருந்து நழுவும்போது அது இறுதியாக பொது நல அமைப்புகள் மீதுதான் விழும். ஆனால் நமதூரைப்பொருத்தவரை மேற் சொன்ன அனைத்து பிரிவினரும் அதாவது ஒட்டு மொத்த சமூகமும் தனது கடமையில் இருந்து தவறியிருக்கின்றது.

ஓடிப்போகும் சம்பவங்கள் ஏதோ ஒரு தனிப்பட்ட வீட்டில் தனியொருத்திக்கு நடப்பதாக நாம் நினைப்பதால்தான் இந்த கடமையை எளிதாக புறக்கணிக்கின்றோம். அடுத்ததாக இது போன்ற நிகழ்வுகள் நடக்கும்போது பொது தளத்தில் விவாதிப்பதையே ஒரு அவமானமாக கருதும் போக்கும் நம்மிடையே உள்ளது.

முதலில் இந்த எண்ண போக்குகளிலிருந்து நமதூர் மக்கள் விடுபட வேண்டும். தீக்கோழி போல் தலையை மட்டும் மண்ணுக்குள் புதைத்து கொள்வதால் சமூக அவலங்களை உலகத்தின் பார்வையை விட்டும் மறைக்க இயலாது என்கின்ற கசப்பான உண்மையும் நமக்கு புரிய வேண்டும்.

பின்னர் இந்த ஒழுக்க சீர்கேட்டின் ஆணி வேரை கண்டு பிடித்து தீர்க்கும் வகையில் ஜமா அத்துகள் ,ஆலிம்கள் , கல்வி நிறுவனங்கள் , சமூக நல அமைப்புகளின் பிரதி நிதிகளை உள்ளடக்கிய ஒரு அவையில் விவாதங்களும் கலந்தாலோசனைகளும் நடைபெற வேண்டும்.. இப்பிரச்சினைக்கு ஆன்மீகம் & தனி நபர் ஒழுக்கம் , குழந்தை வளர்ப்பு , உளவியல் , மன நலம் , ஆண் பெண் தொடர்பாடல் , பெற்றோர் புறக்கணிப்பு ,வறுமை , உரிய வயதில் திருமண தொடர்புகள் அமையாமை ,பெண் கல்வி , பெண்கள் உரிமை , நவீன தகவல் தொடர்பு சாதனங்களின் வருகை , உலக மயமாக்கம் , நுகர்வியம், மத மாற்றம் , ஃபாசிச இயக்கங்களின் செயல்பாடு என பல பக்கங்கள் உண்டு. 

இந்த விவாதங்களில் பிரச்சினையை துண்டு துண்டாக பார்க்காமல் மேற்குறிப்பிட்ட பல பக்கங்களையும் சேர்த்து ஒட்டு மொத்தமாகத்தான் அணுக வேண்டும். அப்போதுதான் தீர்வின் வாசலையாவது பார்க்க முடியும். தவறும் பட்சத்தில் உலகெங்கிலும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் பெருமையாக நினைவு கூறப்படும் நமதூரின் வரலாற்று பாரம்பரியம் இது போன்ற சிறுமைகளால் மங்கி விடும் சங்கடமும் உண்டு

சீர்திருத்த முயற்சிகள் அவசர கதியில் செய்யப்பட வேண்டும். இல்லையெனில் ஓடிப்போதலும் தவறான உறவுகளும் தினசரி காலண்டரின் தாளைக்கிழிப்பது போன்று எளிதில் மறக்கக்கூடிய அன்றாட நிகழ்வாகவும் இயல்பான விஷயமாகவும் மாறி விடும்.

Wednesday, December 12, 2012

Half Day IJTHIMA

IJTHIMA -- On 2012-12-25 (4pm-9pm) SCHOOL Naangalla Bayan by; *A.HAMEED Sharaee *RASMY SHAHID Ameeni *MURSHID Abbasi *ARHAM Ihsani